எந்நேரமும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீது சொத்து குவிப்பு வழக்கு பாயலாம்என்கிறார்கள். அவர் சமீபத்தில் நெல்லைக்கு போயிருந்தார். அவர் அங்கி ருந்து கிளம்பியதும், சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் நெல்லைக்கு போயிருக்கிறார். அங்கு உமாசங்கரின் சகோதரர் ஒருவர் மருத்துவமனை நடத்திவருகிறாராம். அவரைப்பற்றியும், உமாசங்கரின் குடும்பத்தினரின் சொத்துகள் பற்றியும் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்குப் போய் விவரங்களை சேகரித்துத் திரும்பியிருக்கிறாராம்