Wednesday, May 12, 2010

நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு!

தஞ்சாவூரில் பள்ளி சேர்கையின் மூலம் பண அறுவடை செய்யும் பள்ளிகளில் முதலிடத்தில் நூறு ஆண்டுகள் பழமையான "கல்யாண சுந்தரம் மேல்நிலை பள்ளி" வகித்து வந்தது, வருகிறது, வரும். இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு சேர்க்கை பண அறுவடையை ஆரம்பித்து விட்டது. இந்த பள்ளி தமிழக அரசு உதவி பெரும் பள்ளி.

கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் வகுபிற்கான Entrance Exam நடந்தது அதில் 600 பேர்கள் கலந்துக்கொண்டார்கள் (விண்ணப்படிவம் + தேர்வு கட்டணம் = 100 மட்டும்) நேற்று Entrance Exam Roll No. 755 பெயர் R.வெங்கடேஸ்வரன் என்பவரின் தாயார் ரிசல்ட் என்ன? என தெரிந்துக்கொள்வதற்காக பள்ளிக்கு சென்று இருக்கிறார். அங்குள்ள அலுவலர்கள் மே மாதம் 5ம் தேதியே ரிசல்ட் அனுப்பிவிட்டோம். பாசானவர்களுக்கு மட்டும் தான் ரிசல்ட் அனுப்பப்பட்டது பெயிலானவர்களுக்கு அனுபவில்லை என தெரிவித்துள்ளனர். அந்த தாயார் நீங்கள் வாங்கும் ரூ100 க்கு 50 பைசா கார்டிலாவது தேர்ச்சி பெறவில்லை என அனுப்பி இருக்கலாமே என கேட்டதற்கு சரியான பதில் இல்லை.

தனது மகனை எப்படியாவது அந்த பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு. பாண்டியராஜ் அவர்களை சந்தித்து உள்ளார்.அவர் K.H.S.S Management செல்லப்பிள்ளை. 120 சீட்க்கு 600 பேர் தேர்வு எழுதிஉள்ளனர் இதில் 60 சீட் M.P, M.L.A, Minister, Collector, Councilor recommendation என சென்று விட்டது என கூறி உள்ளார். எப்படி தான் என் மகனை உங்கள் பள்ளியில் சேர்ப்பது என கேட்டதற்கு கட்டட நிதியாக ரூ 15,000 தரவும் என கூறி உள்ளார். என்னுடைய மகன் Auxilium என்ற பள்ளியில் முதல் மார்க் மாணவன் என அவனுடைய மார்க் சீட்டை கட்டி உள்ளார். இதல்லாம் எனக்கு தேவை இல்லாதது என அந்த ஆசிரியர் கூறியதற்கு " உங்கள் பள்ளியில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிந்ததில் இருந்து என் மகன் அழுத்து கொண்டு இருக்கிறான் எனவே அவன் எழுதிய வினா தாளின் பிரதியை எனக்கு கொடுத்தால் அவனிடம் காட்டி சமாதான படுத்துவேன்” என கேட்டதற்கு "பிரதி கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை இது ஒன்றும் பொது தேர்வு இல்லை" என மன வேதனை அடையும் படி பேசியுள்ளார் அந்த ஆசிரியர்.

அன்புள்ள அன்பர்களே இந்த கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கவனத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அந்த தாய் தேர்வு ரிசல்ட் பற்றி விண்ணப்பிக்கவுள்ளார். இந்த மாதிரி நிகழ்சிகளை யார் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.

No comments:

Post a Comment