Wednesday, August 12, 2009

நடிகர் சூரியா இதுவரை சொல்லாதது!

லட்சியமான கலைந்த தலையுடன் கேசுவலாக 'ஹாய்!' சொல்லி அமரும் சூர்யாவின் வயது இப்போதைக்கு ஏறாது. ''இது எங்க மாமியார் வீட்டு ஸ்வீட்!'' என்று கலர் கலர் பாம்பே லாலா ஸ்வீட் கொடுத்து உபசரிப்பவர், வசதியாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டு கண்கள் மூடி மனம் திறக்கிறார்...

டிரெஸ்ஸிங்: ''சினிமாவுக்கு வந்த பிறகுகூட தொப்புளுக்கு மேல பேன்ட், லூஸான சட்டைன்னுதான் திரிவேன். ஒரு தடவை கமல் சார் கிட்டத்தட்ட மிரட்டுற மாதிரி அட்வைஸ் பண்ணதும்தான் டிரெஸ்ஸிங்ல கேர் எடுத்துக்க ஆரம்பிச்சேன். 'பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ்' மாதிரியான ஆல்பங்கள் பார்த்து அதில் இருக்கிற காஸ்ட்யூம் டிசைனையும் டிரை பண்ணுவேன். 'டி-ஷர்ட்ல கழுத்துப் பட்டனைத் திறந்துவிடுங்க. மேன்லியா இருக்கும்'னு காதுல விழுற டிப்ஸையும் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டேன்!'''

கனவு: ''அடிக்கடி வரும் அந்தக்கனவு. நான்லயோலாவில் பி.காம்.,படிச்சேன். ஆனா, கனவுலநான் எம்.காம்., சேர்ந்துசெமஸ்டர் எக்ஸாமுக்குவிழுந்து விழுந்துபடிச்சுட்டுப் போவேன்.ஆனா, அன்னிக்கு வேறபேப்பருக்கு எக்ஸாம். ஒருகேள் விக்குக்கூட எனக்குப்பதில் தெரியாது.கண்ணைக் கட்டி மயக்கம்வர்ற மாதிரி இருக்கும். 'இந்தப் பேப்பரும்அரியர்டா'னு பைக்ஸ்டாண்ட்ல கண் கலங்கிநிற்பேன். 'மாட்டுனடாசூர்யா... வசமாமாட்டிக்கிட்டே!'ன்னு ஒருகுரல்பேக்ரவுண்ட்லஎன்னைக் கேலி பண்ணும்.அந்தக் குரல் கேட்டதும்கனவு கலைஞ்சிரும்.எப்போ அந்தக் கனவுலநான் எம்.காம்., பாஸ்பண்ணப் போறேன்னுதெரியலை!''

ஃபிட்னெஸ்: ''ஸ்கூல்ல என்கிளாஸ்மேட்ஸ்பொண்ணுங்களை கரெக்ட்பண்ண இன்டர்வெல்லஆர்ம் ரெஸ்லிங்லாம்பண்ணுவாங்க. காலேஜ்லஅனில் ரெட்டின்னு ஒருபையன் 50 புல்-அப்எடுப்பான். எனக்கு 15தாண்டாது. 'நந்தா'படத்துக்காகத்தான்முதல்முறையாஃபிட்னெஸ்ல கவனம்செலுத்தினேன். என்பெர்சனல் அட்வைஸ்...தயவுசெஞ்சு யாரும்சிக்ஸ்பேக் டிரைபண்ணாதீங்க.தண்ணீர்கூட நிறையக்குடிக்காம இருந்தால்தான்சிக்ஸ்பேக் வரும்.அதனால உடம்புலகால்சியம் குறைஞ்சு பல்,முடிக்கு பயங்கர பாதிப்புஏற்படும். 21 சதவிகிதமாஇருந்த என் உடல்கொழுப்பு 4.5சதவிகிதத்துக்குக்குறைஞ்சது. அந்த மாதிரிநேரத்துல சின்னதாஏதாவது நோய்வந்தாக்கூட சுருட்டிரும்!

மறக்க முடியாத நாள்: ''என் கல்யாணநாள். என் தங்கச்சிபிருந்தா கல்யாணத்துக்குஜெயலலிதா அம்மாவந்திருந்தாங்க.கிளம்புறப்போ 'உனக்குஎப்போ கல்யாணம்?'னுகேட்டாங்க. 'வீட்ல சின்னப்பிரச்னை. அப்பா, அம்மாஒப்புக்கிட்டா உடனேகல்யாணம்தான்'னுசொன்னேன். டக்குனுநின்னவங்க, 'என்னமிஸ்டர் சிவகுமார்,சீக்கிரம் கல்யாணத்துக்குரெடி பண்ணுங்க. நான்அவசியம் வர்றேன்'னுசொன்னாங்க. அப்புறம்எல்லாம் நல்லபடியாநடந்து கல்யாணம்நடந்தப்ப, சொன்னபடிஜெயலலிதா அம்மாவந்திருந்தாங்க. முதல்வர்கலைஞர் ஐயாவும்வந்திருந்தார். முன்னாள்,இந்நாள் முதல்வர்கள்கலந்துகிட்ட அபூர்வமானநிகழ்ச்சிகளில் என்கல்யாணமும் ஒண்ணு!''

சென்டிமென்ட்: ''ஒவ்வொரு படத்தின்முதல் நாள் சூட்டிங்கின்முன் காளிகாம்பாள்கோயிலுக்குப் போய்பூஜை பண்ணிட்டுவருவேன். பெரியநிம்மதியும் பெரியநம்பிக்கையும்கிடைக்கும்!''

பொக்கிஷம்: ''வேல்மணிபாட்டிதான் என் அப்பா,அம்மாவுக்குக் கல்யாணம்பண்ணிவெச்சாங்க.அவங்க என்னைஒருமுறை ஆசீர்வாதம்பண்ணி 100 ரூபாய்நோட்டு ஒண்ணுகொடுத்தாங்க. அதில் நான்அவங்க ஆட்டோகிராஃப்கேட்டு வாங்கினேன்.இப்போ வரை அந்த 100ரூபாயைப் பத்திரமாப்பாதுகாத்துட்டு வர்றேன்!''

லைஃப் லைன்: '' 'இதுவும் கடந்துபோகும்!'னு அப்பாசொன்னதுதான் என்வாழ்நாள் மந்திரம். என்நண்பனின் துரோகம்ஒண்ணு என்னைஅத்தனை வருத்தியது.ஆனா, நாளாக நாளாகஅந்தக் காயம் கொஞ்சம்கொஞ்சமா ஆறிடுச்சு.கிடைக்கிற புகழ்யாருக்கும் நிரந்தரம்கிடையாது. எனக்கு அதுஇப்போ சும்மா 'ஹாய்'சொல்லிட்டுப் போகவந்திருக்குன்னுநினைப்பேன். போரடிச்சா,நாளைக்கே வேறஒருத்தருக்கு அதுஃப்ரெண்ட் ஆயிரும்.பெரிய புகழோ, மோசமானதுக்கமோ, எல்லாமேகடந்து போகும்!''

பர்ஸில் இருக்கும் பணம்: ''ஸ்கூல் படிக்கும்போது அம்மா கொடுக்கிற 15 ரூபாய், சமோசா, புரோட்டான்னு ஒரு நாள் செலவுக்குப் போதும். காலேஜ் படிக்கும்போது அப்பப்போ 200 ரூபா கொடுப்பாங்க. அதை வெச்சு என் 15 ஃப்ரெண்ட்சுக்கும் டின்னர் வாங்கித் தர முடியாது. அதனால 'வீட்ல சாப்பிட்டேன்டா மச்சான்'னு பொய் சொல்லிட்டு, அவங்க சாப்பிடுறப்போ நான் பசியோடு காத்திருப்பேன். இப்பவும் வெளியே கிளம்பினா அம்மாகிட்டதான் பணம் வாங்கிட்டுப் போவேன். 3,000 ரூபாய் எடுத்துட்டுப் போவேன். பெரிய செலவுன்னா கிரெடிட் கார்டு வெச்சு சமாளிப்பேன்!''

மெனு: ''ஃபிட்னெசுக்கு உணவுப் பழக்கம்தான் ஆதாரம். 8 மணிக்கு டின்னர் முடிச்சு 10 மணிக்கெல்லாம் தூங்கப் போயிருவேன். காலையில பிரெட், 11 மணிக்கு ஜூஸ், மதியம் 2 சப்பாத்தி, தந்தூரி சிக்கன், சாயங்காலம் சிக்கன் சான்ட்விச், நைட் வெஜிடபிள், சிக்கன் சூப் இதுதான் என் ஒரு நாள் மெனு. இப்படிப் பிரிச்சுப் பிரிச்சு சாப்பிடுறதால எப்பவும் எனர்ஜி இருக்கும். டைஜஸ்ட் பண்ணவும் ஈஸி!''

கடைசியாக அழுதது: ''பல வருடங்கள் கழித்து 'பருத்தி வீரன்' பார்த்துட்டு தம்பி கார்த்தியைக் கட்டிப்பிடிச்சு அழுதேன். கார்த்தி ரொம்ப வசதியா, சொகுசா வளர்ந்த பையன். சூட்டிங் ஸ்பாட்ல அத்தனை அவமானங்கள், அசிங்கங்களைச் சமாளிச்சு ரெண்டு வருஷம் பல்லைக் கடிச்சு வலியும் வேதனையுமா வேலை பார்த்திருக்கான். எனக்கு அதைப் புரிஞ்சுக்க முடியும்கிறதால அவனைக் கட்டிப்பிடிச்சு அழுவதைத் தவிர வேற எதுவும் என்னால பண்ண முடியலை!''

வாழ்வின் தங்கமான தருணம்: ''தியா பிறந்தப்போ நான் டெலிவரி ரூமில்தான் இருந்தேன். தியா ரத்தமும் சதையுமா வெளியே வர்றதைப் பார்த்தேன். இந்த ரத்தம், இந்த உயிர் நானும் ஜோவும் கொடுத்ததுன்னு நெகிழ்ச்சியா இருந்தது. வீர்வீர்னு அழுதுட்டு இருந்த தியாவை என் கையில் கொடுத்தாங்க. என் குரல் கேட்டதும் உடனே அழுகையை நிறுத்திட்டு கண்ணைத் திறந்து பார்த்தா. அப்போ என் மனநிலையை வார்த்தையால் சொல்ல முடியலை. பொதுவா, லெஃப்ட் ஹேண்ட் யூஸ் பண்றவங்க சென்சிட்டிவா, இன்டெலக்சுவலா இருப்பாங்க. அப்பா, ஜோ ரெண்டு பேரும் லெஃப்ட் ஹேண்டர்ஸ். இப்போ அந்த லிஸ்ட்டில் தியாவும் சேர்ந்திருக்கா!''

பெருமை : ''நல்லவனாவே இருக்கணும்னு நினைப்பேன். ஃபாரின் போகும்போது 'நம்ம லைஃப்... என்ஜாய் பண்றதில் என்ன தப்பு?'னு ஒரு நினைப்பு மனசுக்குள் வரும். அங்கே என்னை யாருக்கும் தெரியாது. தப்பு பண்ணினாலும் வெளியே தெரியாது. ஆனா, அப்பெல்லாம் 'தப்புங்கிறது சுவத்தில் அடிக்கிற பந்து மாதிரி. உடனே திருப்பி அடிக்கும்'னு என் மனசில் ஒரு அலாரம் அடிக்கும். 'இதுவரை நல்லவனா வளர்ந்துட்டோம். இனிமேலும் அப்படியே இருப்போம்'னு அப்போ கட்டுப்பாட்டோடு இருந்துட்டேன். இப்போ அதை நினைச்சாலும் பெருமையா இருக்கும்!''

சூர்யா சீக்ரெட்: ''இதுவரை யாருக்கும் தெரியாது. சின்ன வயதில் நான் ஒரு ஜாலித் திருடன். பசங்க சேலஞ்ச் பண்ணிட்டா, திருடன் அவதாரம் எடுத்திருவேன். பந்தயம் கட்டினதுக்காகவே மயிலாப்பூர் துணிக் கடையில் ஒரு பேன்ட், சிங்கப்பூர்ல ஒரு வாட்ச் திருடி இருக்கேன். மனசாட்சி உறுத்துச்சு. அப்புறமா பணத்தைக் கொடுத்துட்டேன். அப்பவே ஜாலிக்காகக்கூடத் திருடுறது இல்லைன்னு முடிவெடுத்துட்டேன்!''

ஆசை: ''நடிகர் ஜெட்லி ஆரம்பிச்ச 'தி ஒன் ஃபவுண்டேஷன்' அவரைவிடப் பிரபலமானது. ஆரம்பக் கல்வியில் தொடங்கி பேரழிவுக் காலங்களில் மக்களைக் காப்பாத்துறது வரை ஜெட்லி ஃபவுண்டேஷனோட சேவைகள் பிரமாண்டமானது. அது மாதிரி என்னோட 'அகரம் ஃபவுண்டேஷன்' எதிர்காலத்தில் வரணும்!'

2 comments:

  1. நல்லா இருந்துச்சு

    ReplyDelete
  2. நல்லவனாக நடிப்பதை விட உண்மையானவனாக உதைபடுவதே சிறப்பு! suppar suriya

    ReplyDelete