திருப்பூர் சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரின் அளவு நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர். நாட்டுக்குப் பல நூறு கோடிகள் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் அந்த மண்ணுக்கும், அந்த ஊரின் 4 லட்சம் உழைக்கும் மக்களுக்கும் நஞ்சை மட்டுமே பரிசாகத் தருவது எவ்வகையில் நியாயம்? இந் நிலையை மாற்றி, திருப்பூரை அழிவில் இருந்து மீட்டு எடுக்க, சத்குரு ஜக்கி வாசுதேவ் 'பசுமை திருப்பூர் இயக்கம்' என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்கி உள்ளார். 'ஈஷா' அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள், ஆகஸ்ட் 23-ம் தேதி திருப்பூரில் 25,000 மரக் கன்றுகள் நட்டு, அடுத்த 3 வருடங்களுக்கு அதைப் பாதுகாத்து நீரூற்றி வளர்க்க இருக்கிறார்கள். ஊர் கூடித் தேர் இழுக்கும் முயற்சி இது. காலை முதல் மாலை வரை தொடரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இப் பசுமைக் கரங்களின் செயல்பாடுகளுக்கு நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? இரும்பு வேலியுடன் ஒரு செடியை நட்டு 3 வருடங்கள் நீரூற்றி வளர்க்க 600 ரூபாயும், மூங்கில் வேலியுடன் ஒரு செடியை நட்டு 3 வருடங்கள் நீரூற்றி வளர்க்க 200 ரூபாயும் செலவாகிறது. இந்தத் தொகையை நீங்கள் வழங்கினால் உங்கள் பெயரால் அந்த மரம் வளர்க்கப்படும். இதற்கான வங்கி வரைவோலை (அ) காசோலை (அ) மணியார்டரை 'isha foundation' என்ற பெயரில் எடுத்து 'பசுமைக் கரங்கள்', ஈஷா ஃபவுண்டேஷன், 15, கோவிந்தசாமி நாயுடு லே-அவுட், சிங்கநல்லூர், கோயம்புத்தூர்-641005' முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு... 94860 25000, 99444 00035, 94430 57560, 0422-2580155.
good initiative.
ReplyDeleteplease come voipadi.blogspot.com
ReplyDelete