Saturday, July 18, 2009

பேருந்து நடத்துனரின் நல்ல ஐடியா!

சில ஆண்டுகளுக்கு முன் ஐந்து ரூபாயின் தட்டுபாடு அதிகமாக இருந்தது. தற்போது ஐம்பது பைசாவின் தட்டுபாடு அதிகமாக இருக்கிறது. சென்னையில் பேருந்து பயணம் செய்யும் பல பயணிகளுக்கும், நடத்துனருக்கும் இந்த ஐம்பது பைசவிற்காக பிரச்னை தினசரி வாடிக்கை.

சில அனுபவமுள்ள பயணிகள் நடத்துனர் அருகில் நின்று மற்றவர்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது மற்றவர்களுக்கு மீதி பாக்கி ஐம்பது பைசா இல்லை என சொல்லசொல்லுவார். அப்போது, அனுபவ பயணிகள் அந்த அம்மாவிற்கு கொடுக்க வேண்டிய ஐம்பது பைசாவுடன் என்னுடைய பாக்கி ஐம்பது பைசா சேர்த்து ஒரு ரூபாயாக வாங்கிவிடுவார்கள்.

நேற்று திருவான்மியுரிலிரிந்து பிராட்வே செல்லும் பேருந்தின் நடத்துனர் பயணிகளிடம் ஐம்பது பைசா இல்லை எனவே தாங்கள் இறங்கும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் முழு விலையுள்ள டிக்கெட் (3, 4, 5 … ) வாங்கிகொள்ளவும் என்றார். இதன்முலம் ஐம்பது பைசாவை தான் வேண்டுமென்ற வைத்துக்கொண்டு இல்லை என்பதை தவிர்த்தார். பெரும்பாலான பயணிகள் ஐம்பது பைசாவை நீங்களே வைத்துக்கொண்டு சரியான டிக்கெட் கொடுத்தால் போதும் என்று மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

எனவே, தாங்கள் பயணம் செய்யும் போது நீங்கள் இறங்கும் நிறுத்தத்திற்கு அருகில் உள்ள முழு விலையுள்ள டிக்கெட் வாங்கிகொள்வதன் முலம் நடத்துனரிடம் நடக்கும் விவாதத்தை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment