Monday, July 20, 2009

'கவிப்பேரரசு' செல்லப்பெயர்!

தமிழில் No.1 நாளிதழின் வார புத்தகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் நமது "கவிப்பேரரசுவை" 'டை-மண்டு' என செல்லப்பெயரிட்டு மாதத்திற்கு மூன்று மிக மிக நல்ல செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். தற்போது அது போல் வருவதில்லை ( நாளிதழ் அலுவலகத்திற்கு ஆட்டோ சென்றதா ? வேறு ஏதாவது கொடுக்கப்பட்டதா ? தெரியவில்லை !!)

2000 ஆண்டு உதவி இயக்குனரின் திருமணத்திற்காக கவிப்பேரரசு தஞ்சை வந்திருந்தார். அவர் தஞ்சை வரும்போதெல்லாம் அவரை சுற்றி கவிதை வெறியர்கள் சுற்றியிருபர்கள் தற்போது அவர்கள் கவிப்பேரரசுவின் 'வெற்றித் தமிழர் பேரவை' உறுப்பினர்கள்!

அப்போது சில ரசிகர்கள் preview show மட்டும் முடிந்து திரைக்கு வராமல் இருந்த 'ஹேய் ராம்' படம் எப்படி இருந்தது என்றார்கள்? "

உலக தரமான தமிழ் படம். வர்த்தக ரீதியான வெற்றி கடினம்" பேரவை உறுபினர்கள் கை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

மற்றொரு ரசிகன் அப்போது வளர்ந்துவந்த யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுவீர்களா? என்றார் கவிப்பேரரசு தன்னுடைய கணீர் குரலில் அவருக்கே இசையமைக்க படங்கள் இல்லை நான் எப்படி அவர் இசையில் பாடல் எழுவது? என்றார்.

பேரவை உறுப்பினர்கள் கை தட்டி, விசில் அடித்து மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். அந்த நிகழ்ச்சியை தற்போது நினைக்கும்போது நாளிதழ் அவருக்கு சரியான பெயரைதான் வைத்துள்ளது 'டை-மண்டு'

No comments:

Post a Comment