Thursday, July 30, 2009

தமிழக முதல்வர் Vs இந்திய முதல்வர்கள்

ரு நல்லகாரியத்துக்கானஅடிக்கல்லை அறிவிப்பாகநாட்டியிருக்கிறார்முதல்வர் கருணாநிதி!பிற்காலத்தில் அவரதுகோபால புரம் வீட்டைஇலவச மருத்துவமனைநடத்த தானமாகக்கொடுத்திருக்கிறார். இதுஅவருக்கான தனிப்பெருமை!

இதை அறிவித்தகூட்டத்தில் கருணாநிதிஇன்னொரு தகவலையும்தந்துள்ளார். ''இந்தியாவிலேயே தனிபங்களா என்று இல்லாமல்,தெருவிலே உள்ள பலவீடுகளில் ஒன்றாக ஒருமுதலமைச்சரின் வீடுஇருப்பது என்று பார்த்தால்,அது என் வீடாகத்தான்இருக்கும் என்றுநினைக்கிறேன்.முதல்வராகப்பொறுப்பேற்கும் நேரத்தில்எல்லாம் அரசு பங்களாஒன்றில் நான் வசிக்கஏற்பாடுசெய்யப்பட்டபோது, அதைநான்ஏற்றுக்கொள்ளவில்லை.பொது வாழ்க்கை என்பதுபுனிதமானது. அது என்றும்தூய்மையானதாக இருக்கவேண்டும் என்றுநினைப்பவன் நான்''என்றும்சொல்லியிருக்கிறார்.அவர் சொல்லியிருப்பதுஅரசியலுக்கானஇலக்கணம். அதற்குஉதாரண புருஷர்களாகஇந்தியாவில் பலமுதலமைச்சர்கள்இருக்கிறார்கள் என்பதுஇந்த நாட்டுக்கு உள்ளபெருமை.

திரிபுராவின்முதலமைச்சராக மாணிக்சர்க்கார் என்று ஒருவர்இருக்கிறார். மார்க்சிஸ்ட்கட்சியைச் சேர்ந்தவர்.அவரது மொத்தச் சொத்துஎவ்வளவு தெரியுமா? ஒருலட்சம் ரூபாய்! அவர்குடியிருப்பது பங்களாவோஅல்லது தெருவில் உள்ளபல வீடுகளில்ஒன்றாகவோ அல்ல.... பலவீடுகள் இருக்கும்அபார்ட்மென்ட்டில்.இங்கெல்லாம்அமைச்சர்களுக்குத் தனித்தனி பங்களாக்கள்இருக்கின்றன.எம்.எல்.-க்களுக்கு சிறுபங்களாக்கள் அளவிலானஅபார்ட்மென்ட்டுகள்இருக்கின்றன. இது போக,சென்னையில் இரண்டரைகிரவுண்ட் இடம் கேட்டுஅவர்கள்போராடிக்கொண்டுஇருக்கிறார்கள். ஆனால்,திரிபுராவில் அமைச்சராகவருபவர்கள் குடியிருக்கஅரசு சார்பில் கட்டப்பட்டஅபார்ட்மென்ட்டுகள்தான்.அதில்தான் இன்னமும்மாணிக் சர்க்கார் வசித்துவருகிறார். நான்காவதுதடவையாகமுதலமைச்சர் அவர்.அவரது மனைவி பஞ்சலி,சமூக நலத் துறையில்வேலை பார்க்கிறார். அந்தவேலையின் மூலம் வரும்வருமானம்தான் குடும்பம்நடத்தப் பயன்படுகிறது.சொந்த நிலம், வீடு, கார்எதுவும் மாணிக்சர்க்காருக்குக் கிடையாது.அரசாங்க காரை அவர்தவிர யாரும்பயன்படுத்தக் கூடாது.ஒரே இடத்துக்குமனைவியும் செல்வதாகஇருந்தாலும், தனதுமனைவியை அரசாங்ககாரில் ஏற்ற அனுமதிக்கமாட்டாராம்.

கேரளாவின்முதலமைச்சர்அச்சுதானந்தன், 9 லட்சம்ரூபாய்க்கு சொத்துவைத்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் டெய்லராகஇருந்து கம்யூனிஸ்ட்கட்சிக்குள் ஐக்கியமாகி 60ஆண்டுகளுக்கு மேல்ஆகின்றன. ஆனால்,அவருக்குதிருவனந்தபுரத்தில்சொல்லிக்கொள்கிறமாதிரி சொத்து எதுவும்இல்லை. ஆலப்புழாமாவட்டம்புன்னம்புராவில் இருக்கும்வீட்டைப் பார்த்தால்'முதல்அமைச்சரின் வீடா'என்று கேட்கத் தோன்றும்.இப்போது அவர்இருப்பதென்னவோதிருவனந்தபுரத்தில் அரசுவீட்டில்தான்! ஆனால்..?ஒரு நகராட்சித்தலைவருக்கு நகராட்சிவீடு கிடைத்ததும்எவ்வளவு செலவழித்துமராமத்து பார்ப்பார் என்றுயாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.அமைச்சர்களதுபங்களாக்கள் பலலட்சங்களைஉள்வாங்கும். ஆனால்,அச்சுதானந்தனுக்குநடந்ததைப் பாருங்கள்.ஒரு நாள் கட்டிலில்படுத்திருந்தவர்,அவசரமாக எழுந்துபாத்ரூம் போனார். உள்ளேஇருந்தவருக்கு 'டமார்டிமீர்' என்று ஏதோ சத்தம்.வெளியே வந்து பார்த்தார்.கட்டிலுக்கு மேலே இருந்தசீலிங் உடைந்துநொறுங்கிக் கீழேவிழுந்திருந்தது. கொஞ்சம்தாமதித்திருந்தால், அன்றுஅச்சுதானந்தன்படுகாயப்பட்டிருப்பார்.

பினராய் விஜயன் தனதுகட்சிக்காரர் என்பதை யும்மீறி, ஊழல் செய்தார்என்பதற்காக நடவ டிக்கைஎடுக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டியவர்அச்சுதானந்தன். இதுகேரளாவின்கௌரவத்தைத் தூக்கியதுஎன்பதால்தான் பொலிட்பீரோவில் இருந்து மட்டும்அச்சுதானந்தனைத் தூக்கிஆறுதல் அடைந்தஅவருடைய கட்சி,முதல்வர் பதவியில்கைவைக்கவில்லை.

மேற்கு வங்கமுதலமைச்சர் புத்ததேவ்பட்டாச்சார்யாவும்எளிமைக்குஉதாரணமானவர்.மாவோயிஸ்ட்டுகளுடன்மல்லுக்கட்டி நிற்கும் அவர்மீது அரசியல்ரீதியாகவிமர்சனங்கள்இருக்கலாம். ஊருக்குள்எந்த காரையும் விடமாட்டோம் என்றுமாநிலத்தின் சிலபகுதியில்போராட்டக்காரர்கள்கொந்தளித்துக்கொண்டுஇருந்தபோது, ஒரு ரிக்ஷாமட்டும் அமைதியாகஉள்ளே நுழைந்தது. அதில்இருந்து இறங்கியவர்புத்ததேவ்.

ஜோதிபாசுவுக்குப் பிறகுஇவர்தான் முதல்வர்.திரிபுரா மாதிரி இங்கும்அபார்ட்மென்ட்தான்.அமைச்சராக புத்ததேவ்ஆனபோது ஒரு வீடுகிடைத்தது. அங்குதான்இன்றும் இருக்கிறார்.அப்போது வைத்திருந்தபழைய கார்தான்இப்போதும். மனைவி,மகள் தவிர வீட்டில்யாரும் கிடையாது.முதல்வர் சம்பளத்தைஅப்படியே கட்சிக்குக்கொடுத்துவிடுகிறார். கட்சிதரும் சம்பளத்தைவைத்துத்தான் குடும்பம்நடக்கிறது. இத்தனைஆண்டு கால அரசியல்வாழ்க்கையில் இதுவரைசேர்த்த சொத்தாக 15லட்சம் ரூபாய்தான்தேறுமாம். மாவோயிஸ்ட்அச்சுறுத்தலைத்தொடர்ந்து முழுப்பாதுகாப்புடன் கூடியவீட்டில் அவர் குடியேறவேண்டும் என்று மத்தியஉளவுத் துறையும் மாநிலபோலீசும் சொன்னதை,இவர் இன்னும்ஏற்கவில்லை.

இன்று ஒரிஸ்ஸாமுதல்வராக இருக்கும்நவீன்பட்நாயக்கின் அப்பாபிஜூ பட்நாயக்முதல்வராக இருந்தவர்.சொந்தமாக கார்வைத்திருப்பது மாதிரி,அந்தக் காலத்தில் கலிங்காஏர்லைன்ஸ் எனஅரசியலுக்கு வருவதற்குமுன்பே சொந்தமாகவிமானம்வைத்திருந்தவர். மகன்நவீனை அமெரிக்காவில்படிக்கவைத்தார்.அப்பாவுக்குப் பிறகுஅரசியலுக்குள் நுழைந்தஃபாரின் ரிட்டர்ன்மகனுக்கு இன்றையசொத்து மதிப்பு இரண்டுகோடிகள்தான் தேறும்.மூன்றாவது முறையாகமுதல்வராக இருக்கும்நவீன் எந்தப் பாதுகாப்புபந்தாக்களும் இல்லாமல்காரில் போய்க்கொண்டுஇருந்தார். பின்னால்வேகமாக வந்த கார்ஓங்கித் தட்டியதில்முதல்வர் கார்நொறுங்கியது. உள்ளேஇருந்த நவீனுக்கும்படுகாயம். முழுமையாகஅவர் மீண்டுவர பலநாள்ஆனது.


இவரைப் போலவே எளிமையானவர், பீகாரின் நிதீஷ்குமார். முதல்வரானதும் அவர் இருப்பது அரசாங்க வீடு. ஏற்கெனவே முதல்வராக இருந்த லாலு, ரப்ரி பயன்படுத்திய வீடு அது. ஆனால், அவருக்குச் சொந்தமாக பாட்னாவில் இருப்பது சிறு அபார்ட்மென்ட் வீடு. போக்குவரத்துக்குச் சரியாக இருக்காது என்பதால் இங்கு மாறி இருக்கிறார். சொத்து மதிப்பு 55 லட்ச ரூபாய். நிதீஷ் இப்போதெல்லாம் அதிகம் இருப்பது கிராமத்தில்தான். ரிக்ஷாவில் தினமும் ஏதாவது ஒரு கிராமத்துக்குப் போய் அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்பது, அங்கேயே தங்கிவிடுவது, மறுநாள் அடுத்த கிராமம்... இதற்கு வளர்ச்சிப் பயணம் என்று பெயர் வைத்திருக்கிறார். அவசர ஆலோசனைகள் என்று வந்து பாட்னா திரும்ப முடியாத தூரமாக இருந்தால், அமைச்சர்களைத் தான் தங்கியிருக்கும் கிராமத்துக்கே வரச் சொல்லி கேபினட்டை நடத்துகிறார். 'இந்த மாதிரி ஊருக்கெல்லாம் வந்திருக்க மாட்டீங்கள்ல' என்று மந்திரிகளிடம் கிண்டலுக் கும் குறைவில்லை.

இதே மாதிரி நகரங்களுக்குள் கலக்குபவர் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான். ஒன்றரைக் கோடிக்கும் குறைவான சொத்துள்ளவர். மொபைல் போன்கூட வைத்துக்கொள்வது இல்லை. திடீரென்று ஒருநாள், தனியார் டிராவல்சுக்கு போன் செய்து ஒரு காரை வாடகைக்குப் பிடித்தார். என்னுடன் போலீஸ் யாரும் வரக் கூடாது என்று கட்டளை போட்டார். அவர் மட்டும் காரில் ஏறி போபாலை வலம் வந்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜய்தோரே என்பவர் அந்த நள்ளிரவு நேரத்தில் வரும் வாகனங்களை நிறுத்தி வசூல் மும்முரத்தில் இருந்தார். அவரைக் கையும் களவுமாகப் பிடித்து சஸ்பெண்ட் செய்தார். கண்ணைக் கூசும் வெளிச் சத்துடன் எதிரே ஒரு கார் வந்தது. இப்படி லைட் போட்டுச் சென்றால் விபத்துதானே நடக்கும் என்று அந்த காரை விரட்டினார். அது அரசு வாகனம். உள்ளே இருந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, பணக்காரர்தான். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. ஆனால், வீடு என்று பார்த்தால் சொல்லுவதற்கு அவரைப் பற்றியும் மிக சுவாரஸ்யம் உண்டு. அவருக்கு கடப்பா மாவட்டம் மானபுலி வெந்தலாவில் பரம்பரை வீடு இருக்கிறது. அங்கு அவரது அம்மா இருக்கிறார். நெடுஞ்சாலைத் துறை நான்கு வழிச் சாலை அமைக்க இடைஞ்சலாக இருப்பதால் அந்த வீட்டைஇடிக்க அதிகாரிகள் முயற்சிக்க... உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். ராஜசேகர ரெட்டி உடனே அதிகாரிகளை அழைத்தார். 'மக்களுக்கு நன்மை செய்வதற்காக என்னுடைய வீட்டை இடித்தாலும் பரவாயில்லை' என்றவர், நானே எனது சொந்தச் செலவில் இடித்துத் தருகிறேன் என்று இடித்தும் கொடுத்தார்.

தேர்தல் பிரசாரத்தில் இருந்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. மைசூர் மாவட்டம் நஞ்சன் கூடுவில் அவரது கார் போய்க்கொண்டு இருந்த போது, தேர்தல் அதிகாரிகள் மறித்தார்கள். 'நான்கு கார்களுக்கு மேலே உங்களது அணிவகுப்பில் வருகிறது'' என்று கூடுதல் காரைப் பறிமுதல் செய்யப் போனார்கள். அனுமதி வாங்காத எண்ணுள்ள காரைப் பறிமுதல் செய்ய அவர்கள் முயற்சித்தபோது, உள்ளே இருந்தார் எடியூரப்பா. 'தப்பு என் மேலதாங்க' என்று எந்தக் கோபமும் இல்லாமல் இறங்கினார். இறக்கிவிட்ட அதிகாரிகள் இன்னமும் நிம்மதியாக அங்கு அதே வேலையில்தான் இருக்கிறார்கள்.

இந்திய மாநிலங்களை ஆளும் முதல்வர்கள் காட்டியுள்ள சொத்துக் கணக்குப்படி பார்த்தாலும்... ஒரு கோடி முதல் பத்துக் கோடி வரை கணக்கு காட்டியிருப்பவர்கள் 18 பேர். மற்றபடி, .பி. முதல்வர் மாயாவதியின் 52 கோடியுடனும், தமிழக முதல்வரின் 26 கோடியுடனும் மேலே சொன்னதில் பல முதல்வர்களின் சொத்துக் கணக்கு போட்டியிட முடியாதுதான்!

2 comments:

  1. Lot of Information. MK has been cheating, minsinforming people of TN for very long time. The sad part is there are still people believe him and follow him blindly.

    ~Murugesh

    ReplyDelete
  2. Say at least thanks to Vikatan. You copied it from Vikatan which is an anti-DMK magazine.

    ReplyDelete